பைடன் - டிரம்ப் இடையே கடும் விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்
சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலானது இந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் நேரடி அரசியல் விவாதம் ஒன்று அரங்கேறியுள்ளது.
சர்வதேச தொலைக்காட்சி ஒன்றின் ஏற்பாட்டில் இன்று இந்த விவாதம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பிரதான வேட்பாளர்கள் இருவரும் விவாதத்தில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.
மேலும் விவாதத்திற்கு இடையூறு ஏற்படுவதைக் குறைக்க, ஒரு வேட்பாளரின் ஒலிவாங்கி மற்ற வேட்பாளர் பேசும் போது ஒலியடக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கொள்கை
டொனால்ட் டிரம்ப் இதன்போது பைடனின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்தார், மேலும் ட்ரம்ப் குற்றங்கள் மற்றும் 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சிப்பதாக பைடன் குற்றம் சாட்டினார்.
எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் பதில்களால் ஜனநாயக ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விவாதத்தின் போது ஜோடைபன் பெரும் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜோபைடனின் கரமுரடான குரலும்( உடல்நிலை சரியில்லை என அவரது பிரச்சாரகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக கட்சி
பைடன் தனது சிந்தனையை இழந்ததாக தோன்றிய சில தருணங்களும், பார்வைக்கு தென்பட்ட சிறந்த விடயங்கள் இல்லை என மற்றொரு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நவம்பரில் பைடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஊடகங்களில் ஆய்வாளர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
குடியரசுக்கட்சியினரும் இதேவிடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை ஜனநாயக கட்சியினர் உடனடியாக ஜனாதிபதியின் பின்னாள் அணி திரண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |