தேர்தல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைத் தகவல்கள் குறித்து ட்ரம்ப் உரை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.
இந்த உரையின் போது, 2020 அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட முயன்றது தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை வெளியிடலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தேர்தல் முறைகள்
எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறைகள் மற்றும் வாக்குப்பதிவு பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைப் பேசி வரும் சூழலில் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.