அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சி! இந்திய வம்சாவளி இளைஞர் கைது
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா(19) என்ற இளைஞரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே, பாதுகாப்பு தடுப்புகள் மீது டிரக் வாகனமொன்று மோதியதையடுத்து அந்த டிரக்கை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த இளைஞரிடம் பாதுகாப்பு படையினர் விசாரித்துள்ளனர்.
இந்திய இளைஞர் வழங்கிய வாக்குமூலம்
இதன்போது மிசூரி மாகாணத்தில் வசித்து வரும் சாய் விர்ஷித் பாதுகாப்பு தடுப்புகளை வெள்ளை மாளிகையின் உள்ளே வாகனத்தை செலுத்த முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்ற இந்த தாக்குதலை 6 மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக பொலிஸாரிடம் சாய் விர்ஷித் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை கொலை செய்வதுடன், தனது பாதையில் குறுக்கே நிற்கும் அனைவரையும் தாக்குவேன் எனவும் கைது செய்யப்பட்ட இளைஞர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
