உலக அரங்கில் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கை! ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவை தளமாக கொண்டு அடுத்த மாதம் இடம்பெறவுள்ள உலகின் ஜனநாயகம் தொடர்பான உச்சி மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படாமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் Summit for Democracy அல்லது ஜனநாயகத்துக்கான உச்சிமாநாட்டு என்ற கருப்பொருளில் ஒரு முக்கியமாக மாநாடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் நடத்தப்படவுள்ளது.
மெய்நிகர் வழியாக நடத்தவுள்ள இந்த மாட்டில் பங்கெடுக்க உலகின் 109 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் இலங்கை புறக்கணிக்கபட்டுள்ளது.
இலங்கைக்கு அழைப்பு விடுக்காததன் மூலம் இலங்கை ஒரு ஜனநாயக விரோத நாடு என்பது அனைத்துலக அரங்குக்கு பகிரங்கப்படுத்தபட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவற்துறையினருக்கு பயிற்சி வழங்கும் செயற்திட்டம் முற்றாக கைவிடப்படுவதாக நேற்று ஸ்கொட்லாந்து காவற்துறை அறிவித்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் ஒடுக்குமுறைகளை செய்வதாக பிரித்தானியா தனது பூகோள மனித உரிமை நிலைமை அறிக்கையிடலில் தெரிவிக்கப்பட்ட பின்னணியிலும் இந்த புதிய நகர்வு அமெரிக்காவில் இருந்து வெளிப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. ஆனால் இலங்கை பங்காளி நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்த மாநாட்டுக்கு தாய்வானுக்கு அழைப்பு விடுத்தமை குறித்து சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |