ஜனாதிபதி ஜோ பைடன் அலுவலகத்தில் சோதனை! ரகசிய ஆவணங்கள் தொடர்பில் விசாரணை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று (22.01.2023) எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோனையின் போது, அரசுடன் தொடர்புடைய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என கூறப்படுகின்றது.
விசாரணைக்கு உத்தரவு
சுமார் 13 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஜனாதிபதி ஜோ பைடனின் அலுவலகம் மற்றும் இல்லத்திலிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய மற்றும் ரகசிய ஆவணங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில்,
“இந்த சோதனையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அந்த ஆவணங்களில் எதுவும் இல்லை என்பதை விரைவில் நீங்கள் அறியத்தான் போகிறீர்கள். சட்டரீதியாக இந்த விவகாரத்தை நாங்கள் எதிர்கொள்வோம்.” என்றார். அதேசமயம், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The Department of Justice just announced they searched Joe Biden’s home on Friday and found SIX MORE classified documents. This comes after Biden said there were no more. It’s way past time for a full FBI raid of all Joe Biden’s properties. Our democracy won’t survive otherwise.
— Clay Travis (@ClayTravis) January 22, 2023