ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவின் கணிப்பு
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த தாக்குதலில் முதலாவதாக உக்ரைன் தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என அமெரிக்க உளவுத்துறையின் கணிப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்ய படைவீரர்கள் சுமார் 169,000-190,000 பேர் உக்ரைனிலும் அதற்கு அருகிலும் குவிந்துள்ளனர் என்றும் இது கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளில் ரஷ்ய ஆதரவு போராளிகளை உள்ளடக்கியது என்றும் அமெரிக்கா கணித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை இவ்வாறு கூறியுள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை வீரர்களின் பரவல் இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல், என, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.