நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத யாழ்.வீதி! மக்கள் விசனம்
நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நான்கு மாதங்களுக்கு முன்பு அரச நிதியில் கேவில் பிரதான வீதி புனரமைப்பு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
உடனடியாக வேலைகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்த போதும் நான்கு மாதங்களை கடந்தும் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை.
கோரிக்கை
ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இந்த வருடமும் இந்த வீதி புனரமைக்கப்படாது என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கேவில் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் இந்த வீதியால் பயணிப்பது சிரமமாக காணப்படுவதாகவும், பாடசாலை மாணவர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் ஏனைய தேவை நிமிர்த்தம் நாளாந்தம் பயணிப்பவர்களும் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாலும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, உடனடியாக ஒதுக்கப்பட்ட நிதியில் குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.