வரலாறு காணாதளவில் உயர்ந்த அமெரிக்க மசகு எண்ணெய் விலை! தீவிரமடையும் மற்றுமொரு போட்டி
ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மசகு எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய்க்கான மார்டிங் பிரீமியம் (Spot Premium) இதுவரை இல்லாத அளவாக உயர்ந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் வர முடியாத சூழலில், ஆசிய மற்றும் ஐரோப்பிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் எண்ணெய் சந்தையை நோக்கித் திரும்பியுள்ளன.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! நாளை ஏற்படவுள்ள மாற்றம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
கடும் போட்டியில் ஆசிய நாடுகள்
வழக்கமாக அமெரிக்க எண்ணெயை அதிகம் வாங்கும் ஐரோப்பாவுடன், தற்போது ஆசிய நாடுகளும் கடும் போட்டியில் இறங்கியுள்ளதால் மசகு எண்ணெய் விலை விண்ணை தொட்டுள்ளது.

இந்த அதீத விலை உயர்வு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, வட ஆசியாவிற்கு விநியோகிக்கப்படும் WTI மிட்லாண்ட் மசகு எண்ணெய்க்கான பிரீமியம் ஒரு பீப்பாய்க்கு $30 முதல் $40 டொலர் வரை அதிகரித்துள்ளது. இது மார்ச் மாத இறுதியில் இருந்த $20 டொலர் என்ற நிலையிலிருந்து பல மடங்கு உயர்வாகும்.
"ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை விலை தொடுகிறது" என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சரக்கு கப்பல் கட்டணங்கள்
எரிசக்தி பாதுகாப்பு கருதி அரசு உத்தரவின் பேரில் தொடர்ந்து எரிபொருள் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் இதனால் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
மறுபுறம், சர்வதேச அளவில் பெஞ்ச்மார்க் விலையாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent) மசகு எண்ணெயை விட அமெரிக்க எண்ணெய் மலிவாகக் கிடைப்பதால், அமெரிக்க வளைகுடா பகுதிகளில் கப்பல்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இது சரக்குக் கப்பல் கட்டணங்கள் (Freight rates) உயரவும் காரணமாகியுள்ளது. ஐரோப்பாவில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கான பிரீமியம் $15 டொலரை எட்டியுள்ளன.
இந்நிலையில், தற்போதைய சூழலில் மசகு எண்ணெயை வாங்கிச் சுத்திகரிப்பது சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இலாபகரமாக இல்லை என ரைஸ்டாட் எனர்ஜி (Rystad Energy) நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் பவுலா ரோட்ரிக்ஸ்-மாசியு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி - வாடிக்கையாளர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவுறுத்தல்
You may like this..