அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹெரிஸிற்கு கொலை அச்சுறுத்தல் - தாதியொருவர் கைது
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹெரிஸை கொலை செய்ய போவதாக அச்சுறுத்திய 39 வயதான தாதியை புளோரிடா மாநில பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த விசாரணையில் அமெரிக்க உளவு பிரிவும் சம்பந்தப்பட்டிருந்ததுடன், புளோரிடா பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னர், நிவியன் பெட்டி பெஃல்ப்ஸ் என்ற இந்த தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் சிறையில் இருக்கும் தனது கணவர் மற்றும் கமலா ஹெரிஸ் ஆகியோரை கொலை செய்வது தொடர்பாகவும் 50 நாட்களுக்கு உப ஜனாதிபதி செய்வது தனது தனது திட்டம் என கூறும் காணொளிகள் சிலவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த பெண் ஆயுத பயிற்சிகளை பெற சென்றிருந்த புகைப்பட்கள், துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான விண்ணப்பத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தாதிக்கு எதிராக கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.