22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வு
இரண்டு தசாப்தங்களுக்கும் பின்னர் அமெரிக்க மத்திய வங்கி அதன் மிகப்பெரிய வட்டி விகித அதிகரிப்பை அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் சிறிய அதிகரிப்பைத் தொடர்ந்து, அதன் முக்கிய வட்டி விகிதத்தை அரை சதவிகிதம் உயர்த்துவதாகக் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது.
அமெரிக்க பணவீக்கம் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் உயர்ந்த நிலையில், மேலும் பணவீக்கம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மத்திய வங்கி புதன்கிழமை அதன் வட்டி விகிதத்தில் ஆச்சரியமான அதிகரிப்பை அறிவித்தது.
அதே நேரத்தில் அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி சமீபத்தில் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் அதன் முதல் வட்டி விகித உயர்வை நடைமுறைப்படுத்தியது.
இங்கிலாந்து வங்கியும் வியாழன் அன்று விகிதங்களை அதிகரிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது, இது டிசம்பருக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் நான்காவது அதிகரிப்பாகும்.
வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் வங்கிகள் மக்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் கடன் வாங்குவதை அதிக விலைக்கு மாற்றும்.
பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை குறைத்து, விலை பணவீக்கத்தை குறைக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
