ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை.. முக்கிய மின் உற்பத்தி நிலையங்களை சுற்றி வளைக்கும் ஈரானியர்கள்
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய இளைஞர்கள் நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்களைச் சுற்றி 'மனிதச் சங்கிலி' அமைத்துப் போராடத் தயாராகி வருகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த காலக்கெடு எதிர்வரும் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியுடன் முடிவடைகின்ற நிலையிலே ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் மிரட்டல்
இது குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், ஒரே இரவில் முழு நாட்டையும் முடக்க முடியும். அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம்." "நாளை நள்ளிரவு 12 மணிக்குள் ஈரானின் ஒவ்வொரு பாலமும் தகர்க்கப்படும்.
அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிக்கப்பட்டு, வெடிக்கச் செய்யப்படும்." போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்துக் கேட்டபோது, அதைப் பற்றித் தான் கவலைப்படவில்லை.

ஈரானிய மக்கள் விடுதலையைப் பெற இவ்வாறான துன்பங்களை அனுபவிக்கத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான மனிதச் சங்கிலி" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நாட்டின் உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான இளைஞர்களின் அர்ப்பணிப்பைக் காட்டும் என ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஊடாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எனினும் ட்ரம்ப்பின் பிடிவாதமான போக்கினால் எந்நேரமும் தாக்குதல் வெடிக்கலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.