அமெரிக்கா - ஈரான் பதற்றம் : உலக சந்தையில் சரிவைச் சந்தித்த கச்சா எண்ணெய்
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவிற்கு இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த அணுசக்தி தொடர்பான மோதல்கள் குறையக்கூடும் என்ற நம்பிக்கையே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.
பதிவான மிகக் குறைந்த விலை
ஜெனீவாவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தையில், அணுசக்தி விவகாரம் தொடர்பான முக்கிய வழிகாட்டும் கொள்கைகளில் இரு நாடுகளும் ஒரு புரிதலுக்கு வந்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 1.8வீதம் குறைந்து 67.42 டொலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெயின் விலை 0.9வீதம் குறைந்து 62.33 டொலராகவும் சரிந்துள்ளது.
இது பெப்ரவரி மாதத் தொடக்கத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த விலையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்: பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam