இலங்கைக்கு தென் கிழக்காக குறைந்த அழுத்தப் பிரதேசம்: சிவப்பு எச்சரிக்கையுடன் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Galle Hambantota Department of Meteorology Sri Lanka Fisherman
By Mayuri Feb 18, 2026 08:18 AM GMT
Report

இலங்கைக்கு தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இத் தொகுதியின் தாக்கத்தால் குறித்த கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு தென் கிழக்காக குறைந்த அழுத்தப் பிரதேசம்: சிவப்பு எச்சரிக்கையுடன் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Low Pressure Area South Bay Of Bengal

இரண்டாம் இணைப்பு

இலங்கையில் ஏழு மாவட்டங்களுக்கு கனமழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்று முன் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த எச்சரிக்கையானது நாளை (19.02.2026) மதியம் 01 மணி வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புக்களை குறைத்து கொள்ள இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கைக்கு தென் கிழக்காக குறைந்த அழுத்தப் பிரதேசம்: சிவப்பு எச்சரிக்கையுடன் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Low Pressure Area South Bay Of Bengal

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு தென்கிழக்காக தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் நடத்தையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, எனவே கடலில் பயணம் செய்வோரும் கடற்தொழிலாளர் சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய நாளுக்கான (18.02.2026) வானிலை அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

O/L பரீட்சை எழுத தயாராக இருந்த மாணவிக்கு பிறந்த குழந்தை - அதிர்ச்சியில் கல்வி சமூகம்

மழை நிலைமை

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

கடல் நிலை

களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மேலும் இது தொடர்பில் நேற்று (17.02.2026) பிற்பகல் 3 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் இத்தொகுதியின் தாக்கம் காரணமாக கடல் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், நேற்றைய தரவுகளின் அடிப்படையில் அடுத்த 168 மணித்தியாலங்களில் குறித்த தொகுதியானது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் இல்லை எனவும் தெரிவிக்ப்பட்டிருந்தது.  

அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி

GalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US