அநுர அரசின் நடவடிக்கையால் கொழும்பிலுள்ள உணவகங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
கொழும்பிலுள்ள உணவகங்களில் பணிபுரிந்த மலையகத்தை சேர்ந்த பல இளைஞர்கள் வேலையை விட்டுவிட்டு தோட்டத் துறைக்கு வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் ஹோட்டல்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரித்ததால், பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த பலர் உணவகங்களில் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
உணவக பணியாளர்கள்
அரசாங்கம் சமீபத்தில் தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுத்தது.

இதனையடுத்து பொரளை, மருதானை உட்பட கொழும்பில் உள்ள பல உணவகங்களில் பணியாளர்கள், சமையல்காரர்கள் மற்றும் பிற சேவை ஊழியர்களாகப் பணியமர்த்தப்படுபவர்களில் பெரும்பாலோர் தோட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan