அமெரிக்கா - ஈரான் இடையேயான சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப விதிகள் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரில் இன்று (19.6.2026) நடைபெறவிருந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது தூதுக்குழுவை சுவிட்சர்லாந்திற்கு அனுப்ப தாமதப்படுத்தியதே இந்த ஒத்திவைப்பிற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில் இரு நாடுகளும் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி (MoU), பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்தவிருந்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனது சுவிஸ் பயணத்தை இரத்து செய்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம்
லெபனானில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளதோடு, பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவம் அங்கேயே தொடரும் என அறிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த பிடிவாதப் போக்கு வெள்ளை மாளிகைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், "இஸ்ரேல் அரசு தனக்கு உலக அரங்கில் மீதமிருக்கும் ஒரே சக்திவாய்ந்த நட்பு நாட்டை (அமெரிக்காவை) பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது" என எச்சரித்துள்ளார்.
தற்போதைய பதற்றமான சூழலிலும், இடைக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டணங்களை 60 நாட்களுக்கு ஈரான் ரத்து செய்துள்ள போதிலும், போர்நிறுத்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்படுத்தப்படுமா என்பதில் தற்போது பெரும் சிக்கல் நீடிக்கிறது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan