அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் சிறு முன்னேற்றம்; பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஈரான் விஜயம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் குறைக்கும் முயற்சியாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் உயர்மட்டப் பாதுகாப்பு தூதுக்குழுவுடன் ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றுள்ளார்.
இந்த விஜயம் பேச்சுவார்த்தையில் ஒரு சாதகமான அறிகுறி என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்பு! வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர்கள்
ஹோர்முஸ் நீரிணை
அதே நேரத்தில், ஈரானுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் "சிறு முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ள போதிலும், அதன் அளவை தான் மிகைப்படுத்திக் கூற விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், லெபனானின் டெய்ர் கனௌன் என்-நஹ்ர் (Deir Qanoun en-Nahr) பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு சிரியக் குழந்தை உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் அனுமதியுடன் 35 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri