அமெரிக்க - ஈரான் இராஜதந்திரப் போர்: போர்நிறுத்த நீடிப்பிற்குப் பின்னாலுள்ள சிக்கல்கள்
அமெரிக்கா தனது பொருளாதார முற்றுகையை விலக்கிக் கொண்டால் மட்டுமே இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடரப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீட்டித்திருப்பது ஒரு நேர்மறையான சமிக்ஞையாகக் கருதப்பட்டாலும், ஈரானிடமிருந்து வரும் முரண்பட்ட தகவல்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சிக்கலாக்கி வருகின்றன.
தற்போதைய சூழலை மூன்று முக்கிய காரணிகளால் வகைப்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
போர்நிறுத்தம்
முதலாவதாக, நிச்சயமற்ற தன்மை, போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டாலும், எந்த நேரத்திலும் மீண்டும் ஒரு நேரடி மோதல் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்படியே உள்ளன.

இரண்டாவதாக, உடைந்துபோகக்கூடிய நிலை, இந்தச் சூழலில் எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத மாற்றங்கள் நிகழலாம் என்பதால், எதனையும் உறுதியாகக் கூற முடியாத நிலை காணப்படுகிறது.
மூன்றாவதாக சிக்கலான தன்மை, ஹார்முஸ் நீரிணை விவகாரம், அணுசக்தி ஒப்பந்தம், தடைகளை நீக்குதல், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் போர் இழப்பீடுகள் என இரு நாடுகளுக்கும் இடையே பல முரண்பாடான விடயங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இராஜதந்திர நகர்வுகள்
இந்த விவகாரங்களில் இரு தரப்பினரின் நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் உள்ளன.

தற்போதைய இராஜதந்திர நகர்வுகள் வெறும் அவநம்பிக்கையைத் தாண்டி, அமெரிக்காவுடனான எந்தவொரு சுமூகமான உறவையும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும் நிலைக்கு ஈரானைத் தள்ளியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.