உக்ரைனுக்கு கிடைத்துள்ள புதிய உதவி! திணறும் ரஷ்யா
அமெரிக்கா தற்போது 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை எதிர்கொள்ள வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன.
இதனடிப்படையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியளித்த அமெரிக்காவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
We are grateful to ?? for the new defense assistance package worth $300 million. This is extremely important and timely assistance to protect ?? sky from Russian missile and drone terror, as well as to bolster the capabilities of the Ukrainian Defense Forces. Another example of…
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 31, 2023
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
புதிய பாதுகாப்பு உதவி
அந்த பதிவில், 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவி பொதிக்கு அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் பயங்கரவாதத்தில் இருந்து உக்ரைன் வானத்தைப் பாதுகாப்பதற்கும், உக்ரைனிய பாதுகாப்பு படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது மிகவும் முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் உதவியாகும்.
அமெரிக்க ஆதரவு மற்றும் உக்ரைனிய - அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையின் வலிமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |