குண்டுமழை பொழிந்த உக்ரைன் இராணுவம்! ரஷ்ய வீரர்களுக்கு நேர்ந்த சோகம்
உக்ரைன் இராணுவம் லுகான்ஸ்க் அருகே நடத்திய தாக்குதலில், ரஷ்ய வீரர்கள் நால்வர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகேயுள்ள கர்பாட்டி எனும் கிராமத்தில் உக்ரைன் இராணுவம் குண்டுமழை பொழிந்துள்ளது.
இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று பலத்த சேதமடைந்த நிலையில், அதில் இருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மேலும் 16 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் தாக்குதல்கள்

ரஷ்ய வீரர்கள் கோழி பண்ணை ஒன்றில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த பின்னரே உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் கீவ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானதாக கூறப்பட்டது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்ததுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri