அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு பற்றாக்குறையா! டிரம்ப் விளக்கம்
அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஆயுதக் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊகடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அமெரிக்காவிடம் பாரிய அளவில் போர்க்கருவிகள் மற்றும் வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவிடம் குறிப்பாக குறிப்பிட்ட வகையான ஆயுதங்கள் போதியளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தேவைக்கேற்ப பெருமளவிலான போர்க்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளை ட்டியெழுப்பி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்த வகையான போர்க்கருவிகளைக் குறிப்பிடுகிறார் என்பதை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
அமெரிக்க இராணுவத்தின் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான தாட் (THAAD) ஏவுகணைத் தடுப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை தீர்ந்துவிட்டது என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஜனாதிபதி டிரம்ப் போலி தகவல்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.