அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவரை இலங்கைக்கு நியமித்துள்ள அமெரிக்கா (Photos)
இலங்கைக்கான அமெரிக்காவின் அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக ஜூலி ஜே சேங்க் (Julie Chung) அமெரிக்கா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரான அவர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நியமன சான்றிதழை கையளித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார சேவையின் மூத்த அதிகாரியான Julie Chung, இந்தோ-பசுபிக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் ராஜதந்திரியாக கடமையாற்றியுள்ளார்.
இதனை தவிர அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உதவி ராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். ஈராக், கம்போடியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளிவிவகார சேவையில் இணைந்துக்கொண்ட சேங்க், கலிபோர்னியா சான் டியாகோ பல்லைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.
மேலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார். சேங்க, கொரியா, ஜப்பானிய,ஸ்பானிய மற்றும் கெமர் மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை என்ன நடக்கும்..! அச்சத்தில் இலங்கை மக்கள் 2 நாட்கள் முன்

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam
