அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல்: வெளியான பின்னணி
அமெரிக்காவின் பல அரச நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய ஹேக் வலையமைப்பு செயற்பாடுகளினால் அமெரிக்காவில் உள்ள பல உள்ளூர் அரச நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் மென்பொருளில் உள்ள முகவர்களை பயன்படுத்திக் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சைபர்-வாட்ச்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சைபர் ஊடுருவல்
இந்நிலையில் அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனதின் (சிஐஎஸ்ஏ), கோப்பு பரிமாற்ற மென்பொருளான MOVEit இல் பல மாறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவின் பல கூட்டாட்சி நிறுவனங்கள் சைபர் ஊடுருவல்களை அனுபவித்ததாக சைபர் பாதுகாப்புக்கான முகவர் நிலைய நிர்வாக உதவி இயக்குனர் எரிக் கோல்ட்ஸ்டைன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கூட்டாட்சி நிறுவனங்களில் ஏற்பட்ட சைபர் பாதிப்புக்களை முழுமையாகக் கண்டறிய அமெரிக்காவின் அரச சைபர் முகவர்கள் செயல்பட்டு வருவதாக சிஐஎஸ்ஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |