ஆட்கடத்தல் தடுப்பு திட்டத்திற்கான அமெரிக்காவின் நிதியுதவி: ஜூலி சுங் அறிவிப்பு
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அமெரிக்காவினால் நடத்தப்படும் ஆட்கடத்தல் தடுப்பு திட்டத்திற்காக 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மனித கடத்தல்
The US is committed to ending human trafficking in all its forms. That’s why we’re providing over $1 million to a partnership with @IOMSriLanka and @LkDefence to protect and support trafficking survivors – and to ensure perpetrators of these terrible crimes are held accountable. pic.twitter.com/pJjZouCOhM
— Ambassador Julie Chung (@USAmbSL) July 29, 2022
”அனைத்து வடிவங்களிலும் மனித கடத்தலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
கடத்தலின்போது தப்பியவர்களை பாதுகாக்கவும், கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு
இதேவேளை நேற்று (29), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளையும் ஜனநாயக ஆட்சி, முதலீடு என்பவற்றுடன் இலங்கை மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அமெரிக்கா எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க தூதுவர் நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவையும், நேற்று பிரதமர் தினேஸ் குணவர்த்தனவையும் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.