உத்தரவிடப்பட்டால் பெரும் தாக்குதல்! தயார் நிலையில் அமெரிக்கப் படைகள் - ஈரானுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு
தற்போதைய போர்நிறுத்தத்தின் போது ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை ஒரு "மென்மையான" நடவடிக்கை மட்டுமே என பென்டகன் தலைவர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உத்தரவிடப்பட்டால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தித் தொழில் அமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பென்டகனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புத்திசாலித்தனமான முடிவு
அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகும் வேளையில் ஈரான் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

முன்னெப்போதையும் விட அதிக சக்தி மற்றும் மேம்பட்ட உளவு அமைப்புகளுடன் நாங்கள் ஆயுதம் ஏந்தியுள்ளோம்.
ஈரானின் முக்கிய உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தித் தொழில் ஆகியவை எங்கள் இலக்கு வரம்பிற்குள் உள்ளன.
நாங்கள் அத்தகைய தாக்குதலுக்குச் செல்ல விரும்பவில்லை என்றாலும், தேவைப்பட்டால் அவ்வாறு செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam