இலங்கையில் ஹொலனின் நோட்டம் (Video)
அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலனினுடைய இலங்கை வகையானது இலங்கை அரசியல் நகர்வுகளை நோட்டமிடும் அமெரிக்காவின் ஒரு திட்டம் என கூறப்படுகிறது.
குறிப்பாக காணாமலாக்கபட்டோர் சங்கத்தின் சில தமிழ் உறவுகளை சந்தித்த கிறிஸ் வென் ஹொலன் அவர்களிடத்தில் காணாமலாக்கபட்டோர் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயமானது இலங்கை அரசுக்கு ஹொலனினூடாக அமெரிக்கா ஒரு விடயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளமை வெளிப்படுகிறது.
மேலும், இலங்கை குறித்த எவ்வித கருத்துக்களையும் தற்போது வரை வெளியிடாத கிறிஸ் வென் ஹொலன் அமெரிக்கா சென்ற பின் இலங்கையின் குறைநிறைகளை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல உள்நாட்டு வெளிநாட்டு செய்திகளை அலசி ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு...