அமெரிக்கா புலனாய்வுப்பிரின் பணிப்பாளர் இரகசிய பயணம் தொடர்பில் விசாரணை: உதய கம்மன்பில
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான சீஐஏ யின் பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புக்கு இரகசிய பயணம் மேற்கொண்டமை தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விடயங்களை வெளிக்கொணர முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வில்லியன் பேர்ன்ஸ் உட்பட்ட குழுவினர் தனியான விமானம் ஒன்றில் இலங்கைக்கு வந்து அரச புலனாய்வுத்துறையின் அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் பிரவேசித்ததாக ஏற்கனவே கம்மன்பில தகவல் வெளியிட்டிருந்தார்.
அரச புலனாய்வுத்துறை அதிகாரி
அத்துடன் அவர்கள் ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் செல்லும் போது இலங்கையின் அரச புலனாய்வுத்துறை அதிகாரிகளின் ஆயுதங்கள் களையப்பட்டிருந்ததாக கம்மன்பிலவின் சக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த இரகசிய பயணம் குறித்த செய்திகளை அரசாங்கமும், அமெரிக்கக் தூதரகமும் ஏற்றுக்கொண்டன.
எனினும் என்ன நோக்கத்துக்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசாங்கமும் அமெரிக்கத் தூதரகமும் இதுவரை கூறவில்லை.
எனவே தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த தகவலை அறியும் நடவடிக்கையை
முன்னெடுக்கவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
