தொடரும் ஈரான் - இஸ்ரேல் மோதல் : அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை தாக்கிய ஈரான் - வெளியான காணொளி
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை, அமெரிக்காவுக்கு சொந்தமான அதிநவீன F-35 போர் விமானம் ஒன்றைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க விமான தளம் ஒன்றில் தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் மீது ஈரான் தாக்குதல்
ஈரானின் வான்பரப்பில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, குறித்த விமானத்தை அவசரமாகத் தரையிறக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறியதாக வெளிறாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
🇺🇸🇮🇷⚡️BREAKING: Iran releases footage of a direct hit on a US F-35 fighter jet by air defense forces.
— MonitorX (@MonitorX99800) March 19, 2026
This is the first ever hit on the 5th generation fighter jet. pic.twitter.com/O1f5nMWDML
இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களை சுட்டிக்காட்டி, ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க போர் விமானத்திற்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டால், கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மோதல் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஒரு அமெரிக்க விமானத்தை வெற்றிகரமாகத் தாக்கிய முதல் நிகழ்வாக இது அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்ததா அல்லது ஈரானின் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.