இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை
குழந்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவிற்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க குடியுரிமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இவ்வாறு அமெரிக்கா பயணம் செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவோருக:கு வீசா வழங்கப்படாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு சிலர் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செல்லும் பயணிகள் அமெரிக்க அரசாங்கத்தின் மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்வதாகவும் இது அமெரிக்கப் பிரஜைகளின் வரிப் பணத்திலிருந்து பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குடியுரிமை பெறும் நோக்கில் குழந்தை பெற்றுக்கொள்ளவே அமெரிக்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் போன்று பயணங்களை மேற்கொள்வதாகவும், அவ்வாறான நபர்களுக்கு எதிர்காலத்தில் வீசா வழங்கப்படாது எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.



