41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்
இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்குத் தேர்வான சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் நேற்று(25) விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஆய்வு
அத்தோடு, அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து நாட்டு விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் திபோர் கபு ஆகியோரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த விண்வெளி வீரர்கள் 14 நாள்கள் அங்கேயே தங்கி ஆய்வு நடத்தி விட்டு பூமிக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவினை தொடர்ந்து 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி சென்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam