அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்
வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று (12) யாழ்.பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர்.
அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே இன்று நண்பகல் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேடட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடினர்.
கலந்துரையாடல்
அமெரிக்கத் தூதரகக் குழுவினர் மார்ச் 11 ஆம் திகதி முதல் நாளை 13 ஆம் திகதி வரை வடக்குக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த குழுவினர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் மற்றும் இலங்கைக் கடற்படையின் வடபிராந்திய அதிகாரிகளுடனும், மன்னாரில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சின் காற்றாலை மின்னுற்பத்தி செயற்றிட்ட அதிகாரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம் Cineulagam

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
