அகற்றப்படாத மரக்கிளைகளால் பெரிதும் பாதிப்படைந்துள்ள மாணவர்கள்
கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் வெட்டிய மரக்கிளையை மரக்கூட்டுத்தாபனம் அகற்றாமையால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆபத்தில் உள்ள மரக்கிளைகளை மரக்கூட்டுத்தாபனம் வெட்டிa நிலையிலேயே அவை அகற்றப்படாமல் காணப்படுகிறது.
மாணவர்களுக்கு இடையூறு
குறித்த மரக்கிளை வெட்டப்பட்டு ஒரு மாத காலம் வரை வளாகத்திலேயே காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 1200ற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்ற பாடசாலையில் மாணவர்களுக்கு இடையூறாக வெட்டிய மரக்கிளைகள் காணப்படுவதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



