கொழும்பில் அமெரிக்க தூதரகம் முற்றுகை! ட்ரம்பிற்கு கடும் எச்சரிக்கை
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து முன்னணி சோசலிசக் கட்சி கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்தது.
கைது செய்யப்பட்டு பதவியிழக்கச் செய்யப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை கண்டித்து, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மதுரோவிற்கு எதிராக போதைப் பொருள் – தீவிரவாத சதி, கோகெய்ன் இறக்குமதி சதி, இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் அழிவூட்டும் ஆயுதங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட நான்கு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சர்வதேச ரீதியில் பல நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |