நாளுக்கு நாள் பெறுமதி இழக்கும் இலங்கை ரூபாய்
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (04.06.2026) நாட்டின் பல முன்னணி வர்த்தக வங்கிகள் ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலையை ரூ. 339.50 முதல் ரூ. 340.50 வரையிலான மதிப்பில் பதிவு செய்துள்ளன.
விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி
கடந்த சில நாட்களாக டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு படிப்படியாக சரிந்து வரும் நிலையில், இன்று அது மேலும் பலவீனமடைந்துள்ளது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440.10ஆகவும் விற்பனைப் பெறுமதி 455.80ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379.55ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.00ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235.65ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.03ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.62ஆகவும் விற்பனைப் பெறுமதி 244.61ஆகவும் பதிவாகியுள்ளது.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri