இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொது இராஜதந்திரத்திற்கான துணை செயலாளர் லிஸ் ஆலன் பெப்ரவரி 12 முதல் 22 வரை ஜோர்டான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்தி விரிவுபடுத்தவும் அமெரிக்காவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்த பயணம் அமைந்துள்ளதாக இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ஒத்துழைப்பை வளர்த்தல்
இந்த பயணம் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகள், கருத்து சுதந்திரம், பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பது ஆகியவற்றை நோக்காகக் கொண்டுள்ளது.
துணைச் செயலாளர் ஆலன், இலங்கையில், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் அவர் இலங்கையின் பல்சமய சமூகத்தின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
