அவசரமாக வான்வெளிகள் மூடல்! மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக, அமெரிக்க வெளியுறவுத்துறை உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
தனது X சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய சூழ்நிலை காரணமாக உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
பாதுகாப்பு ஆலோசனை
அதன்படி, அனைத்து அமெரிக்கர்களும் அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு ஆலோசனைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வான்வெளி மூடல்கள் நடைமுறையில் இருக்கலாம் என்றும், மத்திய கிழக்குக்கு வெளியே உள்ளவை உட்பட அமெரிக்க தூதரக வசதிகள் குறிவைக்கப்படலாம் என்றும், ஈரானை ஆதரிக்கும் குழுக்கள் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் எச்சரிக்கையை விடுத்து, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan