அமெரிக்கா-சீனா இடையே விரைவில் பயங்கரமான போர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2025ம் ஆண்டு நிச்சயமாக அமெரிக்கா-சீனா இடையே பயங்கரமான போர் நடைபெறும் என அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் கூறி இருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை பகுதி என்று தெரிவித்து வருவதுடன், ஒரே நாடு இரண்டு அதிகாரம் என்ற கொள்கையை தைவான் மீது திணிக்க முயற்சித்து வருகிறது.
தைவான் மீது சீனா தாக்குதல்
ஆனால் இதற்கு தைவான் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்ததுடன், தைவான் சீனாவின் ஒற்றை பகுதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து, சீனாவும் தீவு நாடான தைவான் மீது போர் தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது.
இதற்கிடையில் எங்களின் நட்பு நாடான தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா கையை கட்டிக்கொண்டு இருக்காது என்றும், தைவானை தாக்குவதற்கு முன்பு அமெரிக்க படைகளை சீனா எதிர்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
அமெரிக்க விமானப்படை
இந்த சூழ்நிலையில், அமெரிக்க விமானப்படை தளபதி மைக் மினிஹான், தனது தலைமை தளபதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் திகதி அனுப்பி இருந்த கடிதத்தில் எழுதியிருந்த தகவல் சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம், ஆனால் அமெரிக்கா-சீனா இடையே 2025ம் ஆண்டு மிகப்பெரிய போர் நடக்கும் என என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை அளித்த பதில், அந்த கடிதத்தில் இருக்கும் கருத்துகள் அமெரிக்க ராணுவத்தின் கருத்து அல்ல என விளக்கப்பட்டுள்ளது.