போலந்துக்கு 4,000 துருப்புகளை அனுப்பும் திட்டத்தை ரத்து செய்த அமெரிக்கா
போலந்து நாட்டிற்கு தற்காலிகமாக 4,000 துருப்புகளை அனுப்பும் திட்டத்தை பென்டகன் அதிரடியாக ரத்து செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பாவில் அமெரிக்கப் படைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் போதிய ஆதரவளிக்காததால் ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தியில் இருந்ததும், ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஐரோப்பியத் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த விரிசலை அதிகப்படுத்தியதாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்புச் செலவு
போலந்து விவகாரத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே, மற்றொரு நேட்டோ நாடான ஜெர்மனியிலிருந்து 5,000 துருப்புகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புச் செலவுகளைத் தாங்களே அதிகரிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவையே எப்போதும் சார்ந்திருக்கக் கூடாது என்றும் வொஷிங்டன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தத் திடீர் முடிவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனச் சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ள போதிலும், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இது ஒரு நிர்வாக ரீதியான நடவடிக்கை மட்டுமே என்றும், தனது நாட்டின் பாதுகாப்பில் இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அதிகரிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ராணுவ இருப்பை, ட்ரம்ப் நிர்வாகம் தற்போது மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam