சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளை தடை செய்த அமெரிக்கா
இஸ்ரேல்–காசா யுத்தத்தில் இஸ்ரேலியர்களின் நடவடிக்கையை விசாரிக்கும், இரண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடையை விதித்துள்ளது.
ஜோர்ஜியாவின் கோச்சா லோர்ட்கிபனிட்ஸே மற்றும் மங்கோலியாவின் எர்டெனேபால்சுரென் டாம்டின் ஆகியோருக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் அதிகாரம்
எனினும் இதனை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதித்துறை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு 2024 நவம்பரில் போர் குற்றச்சாட்டுகள் அடிப்படையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது பிடியானையை பிறப்பித்தது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியன சர்வதேச குற்றவியல் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடையே பரவி உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 மணி நேரம் முன்
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam