இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா பச்சைக்கொடி
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமெரிக்கா மீண்டும் உறுதியளித்துள்ளது.
அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ராபர்ட் கப்ரோத் (Robert Kaproth) இந்த உறுதியை வழங்கியதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அண்மையில் ஸ்ரீலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க திறைசேரி
இந்த கூட்டத்தின் பக்க சந்திப்பாக அவர் பல நாடுகளின் முக்கிய தரப்பினரை சந்தித்து வருகிறார்.

இதற்கமைய, அமெரிக்க திறைசேரியின் துணை உதவிச் செயலாளர் ராபர்ட் கப்ரோத்தை ஷெஹான் சேமசிங்க சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயல்முறையை சரிவர கொண்டு செல்வது நிலையான பொருளாதாரத்துக்கு வழிவகுக்கும் எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியை தவிர்கக உதவுமெனவும் ராபர்ட் கப்ரோத் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 11 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan