புத்தளத்தில் வெளிநாட்டு புகையிலையுடன் சிக்கிய நபர்
புத்தளம் (Puttalam) - நாகவில்லு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு புகையிலைகளை கொண்டு செல்ல முயற்சித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (04.05.2024) புத்தளம் போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், பாலாவி பகுதியில் வைத்து மோட்டார்சைக்கிள் ஒன்று தடுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, 4 பொதிகள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு புகையிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, கைப்பற்றப்பட்ட புகையிலை, பெட்டிகள் மற்றும் கொண்டு
செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியன புத்தளம் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 13 மணி நேரம் முன்
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan