ஷிரந்தியையும் நாமலையும் கைது செய்து மகிந்தவை பழிவாங்கிய அநுர : மேடை போட்டு புலம்பல்
மகிந்த ராஜபக்சவின் அன்பு மனைவி ஷிரந்தியையும், அவருடைய மகன் நாமல் ராஜபக்சவையும் சிறையிலடைத்து அநுர அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பழிவாங்கியுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
குருணாகல் பகுதியில் இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மகிந்த மீதான பழிவாங்கல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தவறான கதைகளை இந்த அரசாங்கம் பரப்பி வந்தது.
மகிந்தவிற்கு வழங்கப்பட்டு வந்த உத்தியோகபூர்வ வாகனங்கள் அகற்றப்பட்டன. உத்தியோகபூர்வ இல்லத்தையும் இல்லாமல் செய்தனர்.

இந்த நாட்டிற்கு 10 வருடங்கள் சேவை செய்த எந்தவொரு நபருக்கும் கிடைக்கக்கூடிய ஓய்வூதியத்தைக் கூட மகிந்த ராஜபக்சவுக்கு இவர்கள் இல்லாமல் செய்தார்கள். அவருடைய பாதுகாப்பையும் குறைத்தார்கள்.
இறுதியில், அவருடைய அன்புக்குரிய மனைவி ஷிரந்தியையும், அவருடைய மகன் நாமலையும் கைது செய்து மகிந்த ராஜபக்சவை தற்போது பழிவாங்கியுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.