பொருளாதார மீட்சிக்காக கலந்துரையாடலில் ஈடுபட்ட அமெரிக்க தூதுவர் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய விண்வெளி நிறுவனமான போயிங் அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டாண்மை இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இலங்கையின் தனியார் துறையுடன் ஒத்துழைப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட போயிங் நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகளை தாம் நேற்று சந்தித்தாக தூதுவர் ட்வீட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்துகளின் தொகுப்பு,