யாழ் விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்
யாழ்ப்பாண (jaffna) மாவட்டத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் (Julie Chung) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது இன்று (15.05.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் “வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.
சிறப்பு நிகழ்வு
மேலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் பாதுகாப்பு, மறுசுழற்சி மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அமெரிக்க தூதர் ஜீலி சங் மற்றும் பல உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |