அமெரிக்க தூதுவருக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையே விசேட சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று(02.08.2024) சரத் பொன்சேகாவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் அரசியல்
இதன்போது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் ஊழலை எவ்வாறு ஒழிப்பது என்பது பற்றிய நுண்ணறிவு மற்றும் யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இந்த நோக்கத்தை அடைவதற்கு அமெரிக்காவுடனும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற தான் எதிர்ப்பார்ப்பதாக பொன்சேகா தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருப்பதாக பொன்சேகா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
