யாழில் டக்ளஸுக்கு ரணில் புகழாரம்
நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திலுள்ள ஈ.பி.டி.பியின் தலைமை காரியாலயத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03.08.2024) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
அவர் மேலும் கூறுகையில்,
“அதலபாதாழத்தில் வீழ்ந்து கிடந்த எமது நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் நான் இறங்கியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எனக்கு பெரும் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்தார்.
அதுமட்டுமல்லாது இந்நாட்டின் கடற்றொழில் அமைச்சராக இருந்து நாட்டின் பொருளாதார ஈட்டலுக்கு மட்டுமல்லாது கடற்றொழில் மக்களுக்கு குறிப்பாக வடபகுதி மக்களுக்கான சிறந்த சேவையையும் ஆற்றிவருகின்றார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தை யாழ். நதி திட்டத்தின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
அத்துடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் கலந்தாலோசிக்கிறோம்.
சிமெந்து நிறுவனம் இருந்த இடத்தில் முதலீட்டு வலயமொன்று ஆரம்பிக்கப்படும். பூநகரியிலும் அதனை மேற்கொள்வோம்.

பலாலியில் சுற்றுலா துறையை மேம்படுத்துவோம். காற்று, சூரிய சக்தி மூலம் பெருமளவில் இங்கு மின் உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலும் பல பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.
அத்துடன் எதிர்வரும் 10 வருடங்களுக்குள் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த மாவட்டமாக மாற்றப்படும்.
எனவே, நாம் அடுத்தபடியாக பொருளாதார யுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பிப்போம்.” என ரணில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri