ஈரானில் பதுங்கியிருக்கும் அமெரிக்க விமானி - ட்ரம்புக்கு உடனுக்குடன் செல்லும் Updates!
ஈரான் மற்றும் வளைகுடா பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களில் ஒன்றிலிருந்து மாயமான அமெரிக்க விமானியை ஈரான் படைகள் தீவிரமாகத் தேடி வருகின்றன.
அதேவேளை, மேலும் இரண்டு விமானப்படை வீரர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் ஆகியோர் வான்வெளி முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள்..
இருப்பினும், போர் ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்களுக்கு இன்னும் ஆபத்து இருப்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன.

ஈரானில் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் உயிருடன் பதுங்கியிருப்பது, உள்நாட்டில் போருக்குக் குறைவான ஆதரவே உள்ள நிலையில், வாஷிங்டனுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஈரான் புரட்சிகர காவல்படை, விமானம் விழுந்த தென்மேற்குப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. "எதிரிப் படைகளை" பிடிப்பவர்களுக்கு அல்லது கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என அந்தப் பிராந்திய ஆளுநர் அறிவித்துள்ளார்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானியர்கள், விமானம் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடி வருகின்றனர்.
"இந்த யுத்தம் ஆட்சி மாற்றத்திலிருந்து விமானிகளைத் தேடும் படலமாகக் குறைந்துவிட்டது" என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு தகவல்..
மீட்புப் பணிகள் குறித்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து உடனுக்குடன் தகவல்களைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பாகிஸ்தான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போர்நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இல்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதில் இருந்து தொடங்கிய இந்தப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தரப்பில் 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கும் ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஈரான் தனது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ட்ரம்பின் அறிவிப்பு
சனிக்கிழமை துபாயில் ஏவுகணைத் துண்டுகள் கட்டிடங்கள் மீது விழுந்ததில் சேதங்கள் ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களைத் தாக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்த நிலையில், குவைத்தில் உள்ள மின் மற்றும் நீர் உற்பத்தி நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது.

இது குடிநீருக்காக கடல்நீரை நன்னீராக்கும் ஆலைகளை நம்பியிருக்கும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தியுள்ளது.
"உலகின் வலிமையான நமது இராணுவம் ஈரானில் எஞ்சியுள்ளவற்றை இன்னும் அழிக்கத் தொடங்கவில்லை. அடுத்து பாலங்கள், பின்னர் மின் நிலையங்கள்!" என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சவூதி அரேபியா, அபுதாபி ஆகிய பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகப் பகுதியிலும் ஏவுகணைத் துண்டுகள் விழுந்துள்ளன. போர் முடிவுக்கு வருவது குறித்து ட்ரம்ப் தெளிவான சமிக்ஞை எதையும் வழங்காததால், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 11 வீதம் உயர்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam