ஈரானின் முக்கிய அணுமின் நிலையத்தை குறிவைத்து அதிரடி தாக்குதல்!
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தெற்கு ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையத்தை குறிவைத்து இன்று (04) வான்வழித்தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தி அமைப்பின்படி, X சமூக ஊடகத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்
பாதுகாப்பு ஊழியர் உயிரிழப்பு
புஷேர் நிலையத்தின் சுற்றுவட்டாரத்திற்குள் ஒரு ஏவுகணை விழுந்ததாகவும், அது வெடிப்பை ஏற்படுத்தி, வளாகத்திற்கு வெளியே உள்ள கட்டடங்களில் ஒன்றைச் சேதப்படுத்தியதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த வெடிப்பின் காரணமாக அந்த இடத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஆலையின் முக்கிய உள்கட்டமைப்பு சேதமடையாமல் இருப்பதாகவும், மின்சார உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெப்ரவரி 28 முதல் புஷேர் அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இராணுவத்திற்கு அறிவுறுத்தல்
இருப்பினும், தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதிப்படுத்தவில்லை என்றும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அணுமின் நிலைய வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒருபோதும் தாக்கப்படக்கூடாது என்று உலக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அணு விபத்தைத் தடுக்க, இராணுவம் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உலக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 23 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri