அமெரிக்க விமானப்படை வீரர்கள் இலங்கை களத்தில்
இலங்கையின் பாதிப்பை ஏற்படுத்திய சூறாவளியின் பின்னரான மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக, விமானப் போக்குவரத்து திறனை வழங்க அமெரிக்க விமானப்படை 36வது தற்செயல் மீட்புக் குழுவைச் சேர்ந்த இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் மற்றும் விமானப்படை வீரர்கள் இலங்கை வந்துள்ளனர்.
அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் இலங்கையின் துணைப் பாதுகாப்பு அமைச்சர் கே.பி. அருண ஜெயசேகர ஆகியோர் இந்த அமெரிக்க குழுவை வரவேற்றனர்.

இந்தநிலையில் அமெரிக்க விமானப்படை வீரர்கள், இலங்கை அனர்த்த முகாமைத்துவ மையத்தினால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் தளவாட ஆதரவை வழங்குவார்கள் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இந்த விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |