இலங்கை நெருக்கடி தொடர்பில் உலகத் தலைவர்கள் இந்தியாவில் முடிவு
இலங்கை, கானா போன்ற நாடுகளின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜி20 நாடுகள் அர்த்தபூர்வமான கடன் நிவாரணத்தை வழங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை அறிக்கை
இதன் மூலம் கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக எதிர்கொண்ட பொருளாதார அதிர்ச்சியிலிருந்து மீள முயலும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மீண்டும் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் தங்களின் மிக முக்கியமான தேவைகளில் முதலீடு செய்ய முடியும் எனவும் பைடன் தெரிவித்துள்ளதா வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை கானா போன்ற நாடுகளின் தொடரும் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான தங்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு புதுடில்லியில் தலைவர்கள் தங்கள் அர்ப்பணிப்பை வெளியிட்டனர், உலக வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதிபைடன் தெரிவித்தார் எனவும் வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.