கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்புகளிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடையே போதைப்பொருள் பாவனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் சமூக சூழலும் சீர்குலைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
போதைப்பொருள்
வீதியில் செல்லும் பெண்களை துஷ்பிரயோகம் செய்கின்றார்கள். ஒரே வீட்டில் தாய், தந்தை, பிள்ளைகள் என அனைவரும் போதை பொருள் பயன்படுத்திகின்றனர்.
இதனால் கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.